இயக்குநர் ஆர்.டி.நாராயணமூர்த்தி காலமானார்

இயக்குநர் ஆர்.டி.நாராயணமூர்த்தி காலமானார்

இயக்குநர் ஆர்.டி.நாராயண மூர்த்தி காலமானார்.

கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், ஒரு வாரமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை (26) அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் படத்தினை இயக்கியுள்ளதோடு, நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார்.

எஸ். ரஜீவன்