இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்ற பாக். அரசு முடிவு
தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதல், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற ஆணை இருந்தும், இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு பொலிஸார் அனுமதி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், இம்ரான் கான் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ஆனால், அடியாலா சிறை நிர்வாகம் அதை திட்டவட்டமாக மறுத்தது.
இதனிடையே, சிறை நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் அரசைக் கண்டித்து தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் சிறை முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

