இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு

இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு

இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து “மோந்தா” என்ற புயலாக தீவிரமடைந்து, அக்டோபர் 26, 2025 அன்று இரவு 11.30 மணிக்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கிமீ தொலைவில், நிலை கொண்டுள்ளது. 

எஸ். ரஜீவன்