அயல் நாட்டுக் குண்டு வெடிப்புகளால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருந்தாலும், இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது மக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (12) பாராளுமன்ற அமர்வின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் பாதுகாப்பு பிரச்சனை இல்லை. இலங்கைக்கு இதுபோன்ற அச்சுறுத்தல் இருப்பதாக எந்த தகவலும் இல்லை. இலங்கையின் உளவுத்துறை தீவிரமாக உள்ளது.
நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் பிரிவு, தேசிய பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்த கேள்வியும் இல்லை. என தெரிவித்துள்ளார்.

