அம்பலாங்கொடையில் வர்த்தகரை சுட்டவர்கள் பயணித்த கார் மீட்பு
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனிய-எகொடவெல சந்தியில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடைய ஒரு வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
கார் ஒன்றில் வந்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

