அனர்த்த மீள்நிர்மாணத்துக்காகவே அவசரகால நிலை

அனர்த்த மீள்நிர்மாணத்துக்காகவே அவசரகால நிலை

தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகால நிலை அமல் படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 

இந்த அவசரகால நிலை அனர்த்த முகாமைத்துவத்திற்கும், வினைத்திறனாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், வேறெந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இது பயன்படுத்தப்படாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். 

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 

மேலும் அவர் கூறுகையில், ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உண்டான சேதங்கள் மற்றும் அவசரகால அனர்த்த நிலைமைகளை நிர்வகித்தல், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் அல்லது முன்பு இருந்ததை விட மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருதல் ஆகிய மூன்று கட்டச் செயன்முறைக்கும் அரசாங்கமே பொறுப்பு என்று கூறினார். 

எஸ். ரஜீவன்