அடுத்த ஆண்டு மூன்றாம் உலகப் போர்!பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா?

அடுத்த ஆண்டு மூன்றாம் உலகப் போர்!பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா?

அடுத்த ஆண்டு மூன்றாம் உலகப் போர்!பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா? என்ற அச்சம் உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ஒரு ஜோதிட கணிப்பாளரான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து சில சந்தேகம் இருந்தாலும், அவரது கணிப்புகள் உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

1996 ஆம் ஆண்டு தனது 85வது வயதில் பாபா வங்கா காலமானார். அவர் இறந்த பின்னரும், ஒவ்வொரு ஆண்டும் அவர் உலகின் எதிர்காலத்திற்காகக் கூறியதாக நம்பப்படும் கணிப்புகள் வெளியாகிப் பேசப்படுகின்றன.

இவர் பல உலக நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகின்றது. அந்த வகையில் AI ஆனது மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அடுத்த ஆண்டான 2026 இல் என்னென்ன ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளதாக அவரை ஆய்வு செய்பவர்கள் கூறியுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் உலகப் போர் 3 தொடங்குவதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகுமென்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே பதற்றம் மிக அதிகமாகுமெனவும் குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா-தைவான் போன்ற நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் உச்சத்தை எட்டுமெனவும் எச்சரித்துள்ளார்.

இந்தப் போரில் மேற்கு நாடுகள் அழிவைச் சந்திக்க நேரிடும் என்றும், கிழக்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார்.

எஸ். ரஜீவன்