லிந்துலை ஆற்றில் மூழ்கி மாயமான 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு
லிந்துலை, அபரகந்த தோட்டப் பகுதியில் பாயும் ஆக்ரா ஆற்றில் மீன் தொட்டிக்கான கற்களைச் சேகரிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிக் காணாமல் போன 14 வயது மாணவனின் சடலம் இன்று (14) மதியம் மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கோட்ட பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் இந்தச் சடலம் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

