மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். 

பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்த குழு தங்களது இராஜினாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் இன்று (27) கையளித்துள்ளது. 

குறித்த குழுவில் டி.ஏ தயாரட்ன, எம்.கே.பி ஜயசேகர, ரவி வித்யாலங்கார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

23-வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழுவின் பதவி விலகல் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

manel