மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது தமிழக வெற்றிக் கழகம்!

மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது தமிழக வெற்றிக் கழகம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. 

மாலை 5 மணி நிலவரப்படி, இக்கட்சி சுமார் 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. 

குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இத்தேர்தலில் கிட்டத்தட்ட தவெக வெற்றி உறுதியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திருச்சி கிழக்கு தொகுதியிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி- போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி பெற்றுள்ளார். 

மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி – ஆதவ் அர்ஜூனா. 

மின்சார வெற்றிக்கு வாழ்த்துகள் – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். 

விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

manel