மருந்து கட்டண ஒழுங்குவிதி திருத்தம்: அமைச்சரவை அங்கீகாரம்

மருந்து கட்டண ஒழுங்குவிதி திருத்தம்: அமைச்சரவை அங்கீகாரம்

மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றுக்கு உரிமமளித்தல் (கட்டணங்கள்) திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகரிப்பதற்காக சமர்ப்பித்தலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏதேனுமொரு மருந்து, மருத்துவ உபகரணங்கள் அல்லது மருத்துவகப் பரீட்சார்த்தங்களுக்கான பதிவு செய்தல் செயன்முறை மற்றும் விதம், குறித்த பதிவுகளை மேற்கொள்வதற்கும், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஒழுங்குவிதிகள் மற்றும் நிபந்தனைகளை மற்றும் குறித்த பதிவுகளை மேற்கொள்ளல் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அறவிட வேண்டிய கட்டணங்கள் தொடர்பாக விடயதான அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதிப் பெறுமதிகள் மாற்றமடைதல், புதிய தொழிநுட்பம் மற்றும் சோதனை முறைகளை அறிமுகப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் சேவைகளை விரிவாக்கம் செய்தல், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் வெளிப்படைத்தன்மையை பேணிச் செல்லல் மற்றும் சர்வதேச சமத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் மருந்துகளைப் பதிவு செய்தல் (கட்டணங்கள்) ஒழுங்குவிதிகளை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

எஸ். ரஜீவன்