மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி பட்டம் பெற்ற மைத்திரிபால!

மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி பட்டம் பெற்ற மைத்திரிபால!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” (President of the Happy Era) என்ற கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும், KGF திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருட ராம் உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

manel