பொருளாதார ஒழுக்கத்தைக்கொண்ட பட்ஜட்- கிரிஷான் பாலேந்திரா
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தால் புதிய முதலீடுகளுக்குள் நுழைய தனியார் துறைக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026 வரவு செலவுத் திட்டம் குறித்த பிந்தைய வரவு செலவுத் திட்டக் கலந்துரையாடல் நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது.
தொழில் அமைச்சர், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும உட்படப் பல வர்த்தகத் துறைப் பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

