பெல்மடுல்ல பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்
தற்போது இலங்கை முழுவதும் நிலவிவரும் அதிக மழை காரணமாக பெல்மதுள்ளை பிரதேச செயலாகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் தற்போதைய நிலவரம் பற்றி கலந்துரையாடுவதற்கான விசேட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று பெல்மதுள்ளை பிரதேச செயலகத்தில், பிரதி அமைச்சரும் பெல்மடுல்லை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பெல்மதுள்ளை பிரதேச செயலத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நிலவும் அனர்த்தங்கள் தொடர்பாகவும் வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், அவசர தேவைகளின் போது மக்கள் இடம் பெயரக்கூடிய பாதுகாப்பான இடங்கள் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் பெருந்தோட்டங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற மரங்கள் அகற்றுவது தொடர்பாக பிரதி அமைச்சரினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இச் சந்தர்ப்பத்தில் பெல்மதுள்ளை பிரதேச செயலாளர் உட்பட அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பல்வேறு அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

