நாட்டைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் அவசியம் – சஜித்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய சமூக,பொருளாதார சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று(7) நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) உடன்படிக்கை 2027 மார்ச்சுடன் நிறைவடைகிறது.
அதன் பின்னர், 2028 ஜனவரி முதல் இலங்கை 2.5 முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.அப்போது கடனைச் செலுத்த முடியாமல் போனால் நாடு கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்கும் என்பதால், அதற்கான தகுந்த கொள்கை ரீதியான நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.
கடந்த கால நேரடி ஆக்கிரமிப்புகளைப் போலன்றி, இன்று பொருளாதார மற்றும் சமூக உறவுகள் ஊடாக மறைமுக ஏகாதிபத்திய தாக்கம் ஏற்பட்டுள்ளது.உலகின் பல்வேறு தரப்பினருடன் இலங்கை மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களில் 90% இற்கும் அதிகமானவை நாட்டின் இறையாண்மைக்கான நிபந்தனைகளை மீறியே நடக்கின்றன.

