தியவன்னா ஓயா ஆற்றில் மூழ்கிய பெண்ணைமீட்ட கடற்படை!
தியவன்னா ஓயாவில் விழுந்த பெண்ணொருவர், கடற்படை உயிர் காக்கும் குழுவினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல ஜப்பான் நட்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் நேற்று (24) நண்பகல், தியவன்னா ஓயாவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்த உயிர் காக்கும் குழுவினர், ஜப்பான் நட்புறவு வீதியின் கிம்புலாவலவிற்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் தியவன்னா ஓயாவில் நபரொருவர் தவறி வீழ்ந்துள்ளதை அவதானித்து, மேற்கொண்ட அவசர மீட்பு நடவடிக்கையின் மூலம் குறித்த பெண்ணை இவ்வாறு பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடற்படையினரால் மீட்கப்பட்ட குறித்த பெண், நுகேகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

