சொந்தமான இடம் அழகான வாழ்க்கை திட்டத்தின் கீழ் வீடுகள்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட இரணக்கேணி மற்றும் வீரன்சோலை ஆகிய கிராமங்களில் வசிக்கும், சொந்தமாக காணி இருந்து வீடு இல்லாத 14 பயனாளிகள் புதிய வீட்டுத் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 10 லட்சம் ரூபாய் மொத்த நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டுத் திட்ட கட்டுமானப் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்காக முதற்கட்டமாக தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் நேற்று 17-06-2026 வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன அவர்கள் பயனாளிகளுக்கான காசோலைகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில்,
குச்சவெளி உதவி பிரதேச செயலாளர்
பிரதி திட்டமிடல் பணிப்பாளர்
குச்சவெளி மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் குச்சவெளி பிரதேச சபை அறுஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

