கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரமவும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று (3) கைது செய்யப்பட்டனர். 

சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத சாரதியான ஐ.எல்.கே. திசாநாயக்க நிறுவனக் கோவை அத்தியாயம் XL VIII, முதலாவது அட்டவணையின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட உரிய விசாரணையின் பின்னர் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டார். 

அப்போது புகையிரதப் பொது முகாமையாளராக இருந்த பி.ஏ.பி. ஆரியரத்ன என்பவரால், குறித்த புகையிரத சாரதியை உடனடியாக சேவையில் இருந்து நீக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. 

எனினும் கைதான சுமதிபால மஹானாம அபேவிக்ரம அதனை முழுவதுமாக மாற்றி, அவரை சேவையில் இருந்து நீக்காமல் அவருக்கு சாதகமாக செயல்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

எஸ். ரஜீவன்