கிராண்ட்பாஸில் 2 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் இளைஞர் கைது!
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக் சந்த செவன, சாலமுல்ல பகுதியில் 02 கிலோ 02 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேகநபர் லக் சந்த செவன, சாலமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

