காவன்திஸ்ஸவின் இறப்பு குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு கோரப்படுகிறது

காவன்திஸ்ஸவின் இறப்பு குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு கோரப்படுகிறது

‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு  எதிர்க்கட்சியினால் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று  கோரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் முன்மொழிவு இன்று (23) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

நாட்டின் தேசிய மற்றும் இயற்கை மரபுரிமையான காவன்திஸ்ஸ யானையின் துயரமான இறப்பு குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்கும், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கும், அந்த யானைக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும் இந்த தெரிவுக் குழுவை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காவன்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து ஆராய்வது போன்று, தற்போது வாழும் யானைகளின் தலைமுறையைப் பாதுகாப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கிய விடயம் என்றும் குறிப்பிட்டார். 

manel