கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக நடமாடும் தூதரக சேவை!

கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக நடமாடும் தூதரக சேவை!

கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் தூதரக சேவை (Consular Camp) இன்றையதினம் (21) இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்திய விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் விசா தொடர்பான அனைத்து விடயங்கள் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உட்பட தேவையான அனைத்து சேவைகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஆலோசனைகள் இங்கு வழங்கப்பட்டன.

அத்துடன் புனித யாத்திரை, சுற்றுலா, மருத்துவம், கல்வி, வணிகம் மற்றும் மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்தியா செல்வதற்குத் தேவையான விசா வசதிகள் உட்பட தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

விசேடமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை பிரஜைகள் இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டை பெற்றுக்கொள்வதற்கான விசேட வசதிகளும் இந்த நடமாடும் சேவையின் கீழ் வழங்கப்பட்டிருந்தன.

இரத்தினபுரி, கேகாலை, பதுளை, குருநாகல், கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கலந்து கொண்டு சேவையினை பெற்று கொண்டனர்.

இந்நிகழ்வில் கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

manel