இலங்கையில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதம்!

இலங்கையில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதம்!

கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் நேரடி பிறப்பு விகிதம் சுமார் 120,000 ஆகக் குறைந்துள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

2019ஆம் ஆண்டில் 319,010 ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை, 2025இல் 214,570 ஆகக் குறைந்துள்ளது.

இது சுமார் 33 சதவீத வீழ்ச்சியாகும்.

நாட்டின் சனத்தொகை நிலைத்தன்மைக்கு ஆண்டுக்கு 330,000 முதல் 360,000 பிறப்புகள் தேவைப்படும் நிலையில், தற்போதைய எண்ணிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

திருமணங்கள் தாமதமாதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இளைஞர்கள் வெளிநாடு செல்லுதல், கல்வி மற்றும் தொழில் துறையில் பெண்களின் ஈடுபாடு அதிகரிப்பு, குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் மலட்டுத்தன்மை சார்ந்த பிரச்சனைகள் போன்றவை பிறப்பு விகிதம் குறைய முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிறப்பு விகிதத்தை ஊக்குவிப்பதற்கான தேவையான ஆதரவையும் சலுகைகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

manel