இலங்கையில் குறைந்த தங்க விலை!

இலங்கையில் குறைந்த தங்க விலை!

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,665 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையில் இன்றையதினம்(11) தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகைய வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

manel