அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய,சமய புத்தகங்கள் தமிழ்நாட்டில் இருந்து!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கும் தமிழ் நாடு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியார்களூக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே சென்னையில் இன்று 23.08.2025 குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலுள்ள சைவ மதகுருமார்கள் தமிழகத்தில் வேதத்தை கற்றுக் கொள்ள வதிவிட ஆவணம் செய்யுமாறு அமைச்சர் இதன்போது முன்வைத்தார்.
குறித்த கோரிக்கையை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மத குருமார்கள் வேதம் கற்பதற்கான பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய, மற்றும் சமய புத்தகங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

