அதிமுக எம் எல் ஏக்கள் இராஜினாமா தவெகவில் இணைந்தனர்

அதிமுக எம் எல் ஏக்கள் இராஜினாமா தவெகவில்  இணைந்தனர்

அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியைதிடீரென் இராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற வெறும் 21 நாட்களிலேயே இந்த அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது.

இன்று பிற்பகல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை) , சத்யபாமா (தாராபுரம்) ஆகிய மூவரும் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான இராஜினாமா கடிதங்களை முறைப்படி சமர்ப்பித்தனர்;இராஜினாமாக் கடிதங்களை சபானாயகர் ஏற்றுக்கொண்டார்.

சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த கையோடு, மூவரும் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தவெகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

manel