ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அதிரடி திருப்பம்

ஹோர்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளின் காரணமாக ஈரான் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அந்நாட்டுக்கு வருமானம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான தடைகள் குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

manel