வைத்தியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

வைத்தியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

நாடு முழுவதும் அரசாங்க வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (05) நண்பகல் 12 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் நுவரெலியா கிளையும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

நாடு முழுவதும் வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் கோரிக்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், வைத்தியர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதும் இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் நுவரெலியா கிளை பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

manel