வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவிலுள்ள பண்ணைகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் களுத்துறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளரான இவர், காலி மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளில் உள்ள நான்கு பேருக்கு கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தலா 1.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் வரகாபொல, அம்பகலகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

