லெப்பைக்குடி முதலாம் பாகம் ஒன்றுகூடல்!

லெப்பைக்குடி முதலாம் பாகம் ஒன்றுகூடல்!

அட்டாளைச்சேனை லெப்பைக்குடியைச் சேர்ந்த நான்கு பாகங்களின் ஒன்று கூடலை முன்னிட்டு லெப்பைக்குடி முதலாம் பாகத்திலுள்ளவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்றிரவு (25) அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

லெப்பைக்குடி முதலாம் பாகத் தலைவர் கிராம சேவகர் எம்.எல்.சாஜஹான் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் ஏ.சி.முஅன்னத் அஹமட் மௌலவி கிறாத் ஓதி ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஐ.அப்துல் றவூப் மரைக்கார் உரையையும், குடும்ப உறவுகளை எவ்வாறு பேணுவது தொடர்பான உரையை நௌபீஸ் மௌலவியும், பொது உரையை ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ.பி.கமால்தீன் ஆகியோர் நிகழ்த்தினர்.

மேலும் விசேட உரையினை மூதூர் பிரதேச செயலாளர் சட்ட முதுமாணி எம்.ஐ.பிர்னாஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.எல்.அஸ்வர் சாலி ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்த ஒன்றுகூடலில் சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

manel