லண்டன் – கொழும்பு இடையே பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவை ஆரம்பம்!

லண்டன் – கொழும்பு இடையே பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவை ஆரம்பம்!
  • வாரத்திற்கு 3 விமான சேவைகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு

லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கான தனது விமான சேவைகளை பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, லண்டன் கேட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாவது விமானத்தில் வருகை தந்த பயணிகளும் விமானப் பணியாளர்களும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டனர். இந்த வரவேற்பு நிகழ்வை இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், பயணிகளுக்கு இலங்கை தேயிலைச் சபையின் அனுசரணையுடன் சிலோன் தேயிலைப் பொதிகளும், இலங்கை சுற்றுலாத்துறையின் அடையாளத்தைக் கொண்ட தொப்பிகள் மற்றும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பிரிட்டிஷ் எயார்வேஸின் இந்தப் புதிய விமான சேவை, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறைக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manel