ரஷ்ய-உக்ரைன் போர் ஆயுதங்கள் மூலமே முடிவுக்கு வரும்!
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் உடன்பாடில்லை என ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜியோ லவ்ரவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் சந்திக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய அணு ஆயுத படைகளின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று(22) நடந்தது. இதன்போது நிலம், நீர், ஆகாயத்தில் பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன. இதனை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மேற்பார்வையிட்டார்.

