யுக்தியவுக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
யுக்தியவுக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கிராண்ட்பாஸ் பொலிஸாரால் தம்மை கைது செய்து, போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி இருவர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தந்தை, ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (20) அனுமதி வழங்கியது.
இந்த மனுவை கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களான தந்தையும் மகனுமான மொஹமட் சுலைமான் மற்றும் இஃப்தான் ரஹ்மத்துல்லா ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தொடர்பாக ஆரம்ப கட்டத்தில் தகவல்களை உறுதிசெய்த பின்னர், நீதியரசர்களான யசந்த கோதாகொட, சோபித ராஜகருணா மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

