முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது குழந்தை, பெண் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.20 மணியளவில் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதே தலகொல்ல பகுதியில் வைத்து மரம் சரிந்து வீழ்ந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை உட்பட நான்கு பேர் சிக்கியிருந்தனர். பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து அவர்களை மீட்டனர்.
காயமடைந்தவர்கள் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 37 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

