முகமாலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

முகமாலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் காணி ஒன்றில் இருந்து 40 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

நேற்று (14) இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். 

நிலத்தை சாகுபடிக்கு தயார் செய்யும் போது காணி உரிமையாளர் குண்டுகளை கவனித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவு குறித்த இடத்தை ஆய்வு செய்தபோது, ​​குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குண்டுகளை செயலிழக்க செய்து பின்னர் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

எஸ். ரஜீவன்

Related Posts