மாணவர்களை இலக்கு வைத்து மசாஜ் நிலையம்: பெண்கள் மூவர் கைது

மாணவர்களை இலக்கு வைத்து மசாஜ் நிலையம்: பெண்கள் மூவர் கைது
[ File # csp10214963, License # 1861352 ] Licensed through http://www.canstockphoto.com in accordance with the End User License Agreement (http://www.canstockphoto.com/legal.php) (c) Can Stock Photo Inc. / pressmaster

களுத்துறை, பாணந்துறையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் அடங்குகின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, மாத்தறை மற்றும் நிட்டம்புளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் 32 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ். ரஜீவன்