மகளிர் அரபிக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நிதியுதவி அளிப்பு!
பொத்துவில் ஜுவைரியா மகளிர் அரபிக் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கான விஷேட இலவச மருத்துவ முகாம் அண்மையில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் (MBBS, DHD, MCGP) தலைமையில் இடம்பெற்ற இந்த விஷேட மருத்துவ முகாமில் கல்லூரியைச் சேர்ந்த 60 பெண் மாணவிகளும், 10 ஆசிரியைகளும் தங்களின் நோய் தொடர்பிலான மருத்துவப் பரிசோதனைகளையும், அதற்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளையும் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
மேலும், அரபிக் கல்லூரியின் கட்டிட வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தனது சொந்த நிதியிலிருந்து ரூபா 50 ஆயிரத்தை கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


