போதையில் வாகனம் ஓட்ட வேண்டாம்!

போதையில் வாகனம் ஓட்ட வேண்டாம்!

போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் சாதனங்கள் தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  

இன்று (23) முதல் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அல்கோலைசர்(alcolizer) சாதனங்கள் அனுப்பப்படும் என்று போக்குவரத்து தலைமையக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

கிட்டத்தட்ட 80,000 அல்கோலைசர் சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.  

கொள்முதல் செயல்முறைக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel