போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் நேற்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றய நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஹெரோயின், 531 கிராம் ஐஸ் போதைபொருள், 754 கிராம் கஞ்சா, 8 கிலோ 953 கிராம் போதை மாத்திரைகள், 249 மாத்திரைகள் உட்பட பல போதைப்பொருட்கள் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ். ரஜீவன்