பொல்பிதிகம வயல்வெளியிலிருந்து சடலமொன்று மீட்பு
பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த நபர் வீடு திரும்பாத நிலையில், முன்னெடுத்த தேடுதலின்போது அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹாவெவ வீதி கும்புகுலேவ பகுதியைச் சேர்ந்த 59 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

