புதிய தேயிலை அறுவடை விழா 2026
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் சபரகமுவ மஹா சமன் தேவாலயத்தில் விழா
இலங்கையின் அதிகூடிய அந்நிய செலாவணி ஈட்டித் தரும் தேயிலை உற்பத்தித் துறையில், சிறு தோட்ட உற்பத்தியாளர்களின் 60 சதவீத உற்பத்தி இரத்தினபுரியிலிருந்து பெறப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிதார்.
வருடாந்த புதிய தேயிலை அறுவடை விழா இன்று [31.05.2026] வரலாற்றுச் சிறப்புமிக்க சபரகமுவ மஹா சமன் தேவாலய பூமியில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சபரகமுவ மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான புஷ்பகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர், “எமது நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளஙும் தேயிலைக் கைத்தொழிலுக்கு ஆசீர்வாதம் வேண்டி நடத்தப்படும் இந்த ‘புதிய தேயிலை விழாவில்’ பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சைப் பிரதிநிதுவப்படுத்தி, முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வதற்குக் கிடைத்த பாக்கியத்தை நான் பெருமதிப்பாகக் கருதுகின்றேன்” என்றார்.
இம்முறை புதிய தேயிலை விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகெங்கும் “இலங்கை தேயிலை” / “சிலோன் டீ” Ceylon Tea நாமத்தைக் கொண்டு சேர்ப்பதில் முன்னின்று உழைத்த இலங்கை தேயிலை சபைக்கு 50 ஆண்டுகள் நிறைவடையும் பொன் விழா ஆண்டு இந்த வருடமாகும் என்றார். இதனைக் குறிக்கும் முகமாக, 21.05.2026 உலக தேயிலை தினத்திற்கு இணையாக கொழும்பில் ஒரு நடைபவனியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“சிலோன் டீ” என்ற இந்த வர்தக நாமத்தின் பின்னால் இருப்பது, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர் மக்களினதும் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினதும் கண்ணீரும், செந்நீரும், வியர்வையுமாகும். இந்தத் தோட்ட சமூகத்தின் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர்களின் வாழ்கைத்தரத்தையும் உயர்துவதே எமது அமைச்சின் முதன்மையான பொறுப்பும் கொள்கையுமாய் இருக்கிறது. அவர்களை வலுப்படுதாமல் தேயிலைக் கைத்தொழிலின் எதிர்காலப் பயணத்தை முன்னெடுக்க முடியாது” எனவும் அவர் வலியுறுதினார். இலங்கையில் தேயிலை உற்பத்தியை 2030 ஆம் ஆண்டு 400 மெட்ரிக் பொன்னாக அதிகரிப்பதே எமது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்
இந்த 50 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தைத் திரும்பிப் பார்கும்போது, இலங்கை தேயிலை சபை ஆற்றிய சேவை அளப்பரியதாகும் என அவர் மேலும் தெரிவிதார்.

