பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பங்களாதேஷின்  முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல்  தீர்ப்பாயம் அறிவித்தது.

பின்னர் மரண தணடனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்டில் பங்களாதேஷில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுடுவதற்கு  ஹசீனா உத்தரவிட்ட  குரல்பதிவு வெளியானதையடுத்து, ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் பொலிஸ் உயர்அதிகாரி  ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல்  தீர்ப்பாயம் இன்று (17) அறிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்