நுவரெலியாவில் மீனாலயா பரதநாட்டிய கலாலயத்தின் ‘ உற்சவம்’ நிகழ்வு!

நுவரெலியாவில் மீனாலயா பரதநாட்டிய கலாலயத்தின் ‘லய உற்சவம்’ நிகழ்வு!
கஜரூபன் திவ்யா நுவரெலியா மகா நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் பங்கேற்பு!மகா நவராத்திரி விழாவை முன்னிட்டு, மீனாலயா பரதநாட்டிய கலாலயத்தின் ஏற்பாட்டில் ‘லய உற்சவம்’ நிகழ்வு இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் ஹாவா எலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மீனாலயா பரதநாட்டிய கலாலயத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெற்றது.இதன்போது, கலாலய மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்வுகள் முக்கிய அம்சமாக இடம்பெற்றதுடன், மாணவர்களின் கலைத்திறன்களும் அரங்கேற்றப்பட்டன.
தொடர்ந்து, பங்கேற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.இந்நிகழ்வானது மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கும், பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

