நியாயமான சம்பளத்தைக் கேட்க வேண்டும்: பிரியாமணி
மற்ற துறைகளைப் போல் திரைத்துறையிலும் பாலின பாகுபாடு மிகுந்திருக்கிறது என்பதே பெரும்பாலான நடிகைகளின் கருத்து. ஆனால் தற்போதுள்ள நிலை பரவாயில்லை என்கிறார் நடிகை பிரியாமி.
அண்மைய நேர்காணல் ஒன்றில், திரையுலகில் பாலின பாகுபாடு இருப்பது உண்மைதான் என்றார்.
நடிகைகள் தங்களுக்கு உள்ள உண்மையான சந்தை மதிப்புக்கு ஏற்ப சம்பளம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரியாமணி, உழைப்புக்கேற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும் என்றார்.
“எனது சக ஆண் நடிகரைவிட எனக்குக் குறைவான சம்பளம் வழங்கப்பட்ட நாள்களும் இருக்கின்றன. இருந்தாலும் அது என்னைப் பாதித்ததில்லை. என்னுடைய சந்தை மதிப்பு எனக்குத் தெரியும். இது என்னுடைய கருத்து, நான் அனுபவித்தது.
“நான் என்ன நம்புகிறேனோ, எதற்கு தகுதியுடையதாக நினைக்கிறேனோ, அதற்கானதை கேட்டுப் பெறுவேன். தேவையில்லாத சம்பள உயர்வை நான் வலியுறுத்த மாட்டேன்” என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் பிரியாமணி.

