நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் கற்பக தரு வளம்

நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் கற்பக தரு வளம்

15வது ‘கற்பகம்’ விற்பனை நிலையத்தினை கதிர்காமத்தில் திறந்து வைத்தார் பிரதி அமைச்சர் பிரதீப் – வடக்கு, தெற்கு உற்பத்திகள் ஒரே கூரையின் கீழ்

பனை சார்ந்த உற்பத்திகளை நாடளாவிய ரீதியில் சந்தைப்படுத்தும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் 15வது ‘கற்பகம்’ விற்பனை நிலையம், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம நகரில் (24/06/) அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் திரு. ஆர். ரவீந்திரன், கதிர்காம பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பனை அபிவிருத்தி சபையின் பிரதி பொது முகாமையாளர் வி. விஜேந்திரன், விற்பனை விநியோக முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

காட்சியறையினை திறந்து வைத்து உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “வடக்கின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களையும், தெற்கின் உற்பத்தி பொருட்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாக இது அமையும் எனவும். கதிர்காமத்திற்கு நாளாந்தம் வருகை தரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு பாரிய கேள்வி உள்ளது .

இதன் மூலம் விற்பனையினை அதிகரித்து , உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும்
தெரிவித்தார் .

மேலும், “வடக்கிற்கு தெற்கும்,
தெற்கிற்கு வடக்கும் பனை சார்ந்த உற்பத்திகள் பெரிதும் பயன்பெறும் வகையில் இந்த வலையமைப்பு அமைந்துள்ளது.
இந்த வருடத்திற்குள் ஒரு லட்சம் பனை விதைகள் தென் இலங்கையில் விநியோகிக்கப்பட உள்ளதாகவும். தெற்கில் வீர விலையில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணிப் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் “இந்த நிதியின் மூலம் பனை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் , புதிய உற்பத்திப் பொருட்களை தயாரித்தல் மற்றும் அவற்றை சந்தைப்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும்

பனை சார்ந்த கைப்பணிகள் மற்றும் உற்பத்திகளை மேம்படுத்தி , உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்களை கொள்வனவு செய்து நுகர்வோருக்கு வழங்குவதே ‘கற்பகம்’ விற்பனை நிலையங்களின் பிரதான இலக்காகும் என்றார். இதன் மூலம் இடைதரகர்களை தவிர்த்தல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் ‘கற்பக தரு’ என போற்றப்படும் பனை மரத்தின் பொருளாதார பெறுமதியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எமது இலக்காகும் எனவும் பிரதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

கதிர்காமத்தில் திறந்து வைக்கப்பட்ட கற்பகம் காட்சியறையில்
பனைவெலி, பனை கருப்பட்டி, நொங்கு, பனஞ்சீனி, பனங்கிழங்கு உள்ளிட்ட பாரம்பரிய பனை உற்பத்திகளை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

manel