தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்ச்சி இன்று ஹட்டனில்

தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்ச்சி இன்று ஹட்டனில்

தேசிய புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட் பிரதேச செயலகம் ஆகியன ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வுகள் இன்று (19) ஹட்டனில் நடைபெற்றது.

ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலையத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்ட அதிதிகள் ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஹட்டன் மல்லியப்பு சந்திவரை பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். 

பின்னர் அட்டன் பிரின்சஸ் மண்டபத்தில் தேசிய தீபாவளி தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு மத்திய மாகாண ஆளுநுர் பேராசிரியர் சரத் அபேகோன் தலைமை வகித்தார். புத்தசாசசன, கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பிரதியமைச்சர்கள் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பிகா சாமுவேல், கிருஷ்ணன் கலைச்செல்வி, நுவரெலியா மாவட்டச் செயலாளர், உத்தியோகத்தர்கள், நோர்வூட் பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கோலாட்டம், மழையகத்தின் பாரம்பரிய கலையான காமன் கூத்து, அருச்சுனதவசு போன்ற வரலாற்றை பிரதிபிலிக்க கூடிய பல்வேறு கலை நிகழ்வுகளும் இன்றைய பேரணியை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ். ரஜீவன்