தீபாவளி தினத்தன்று வட மாகாண மதுபானசாலைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாண மதுபானசாலைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாண மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியிடம் வட மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்து சமய அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ். ரஜீவன்