திருகோணமலை மருத்துவமனையில் அவசர பிரிவு நிர்மாணம்
திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தலுக்கு அமைச்சரவைக்கு அனுமதி அளித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2017 ஆண்டு வழங்கப்பட்டிருப்பினும், ஒப்பந்ததாரரின் குறைவான முன்னேற்றம் காரணமாக 2019 ஆண்டில் மேற்குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டபோது, கட்டிடத்தின் கூரை வரை கட்டுமான வேலைகள் நிறைவு செய்யப்பட்டிருந்தமையால், குறித்த கட்டுமான வேலைகளை இயன்றளவு விரைவாக நிறைவு செய்வது மிகவும் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்குப் பொருத்தமான ஒப்பந்தக்காரரைத் தெரிவு செய்வதற்காக புதிய பெறுகை செயன்முறையை ஆரம்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

