தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் சிங்கப்பூர் அழைப்பு

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் சிங்கப்பூர் அழைப்பு

கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் சிங்கப்பூர் அழைப்பு விடுத்துள்ளது.

ம் கம்போடியாவும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அழைப்பு விடுத்துள்ளது. கூட்டுப் பிரகடனத்தின்படி இரு தரப்பும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அது கூறியது. தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுக்கு அவ்வாறு செயல்படுவது முக்கியம் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 10) தெரிவித்தது.

எல்லையோரத்தில் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இரு தரப்பும் பேச்சின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று சிங்கப்பூர் கேட்டுக்கொண்டது.

“தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதியில் சண்டை மோசமடைந்திருப்பதும் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக வரும் தகவல்களும் சிங்கப்பூருக்கு அதிகக் கவலையைத் தந்துள்ளது,” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

தாய்லாந்து, திங்கட்கிழமை கம்போடியாமீது ஆகாயத் தாக்குதல்களை நடத்தியது. சண்டை மீண்டும் மூண்டதற்கு இரு தரப்பும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறுகின்றன. இரு தரப்பிலும் உயிருடற்சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கானோர் வேறு இடங்களுக்குச் செல்வதாகக் கூறப்பட்டது.

சண்டை நடக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறுகிறது.

எஸ். ரஜீவன்