தலவாக்கலையில் கார் – முச்சக்கர வண்டி மோதி விபத்து: மூவர் படுகாயம்
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை, பெயாவெல் பகுதியில் இன்று (18) மதியம் 12.15 மணியளவில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
பண்டாரவளையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரும், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதியுள்ளன.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. எனினும், காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

