தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் இன்று (17) வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று, பரீட்சை சுட்டெண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் 011 2784208, 011 2784537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

